போத்தனூர் ஸ்ரீராம் நகரில் மக்களை அச்சுறுத்தும் இரு மரங்கள்..!!

-MMH

    கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு அருகே உள்ள ஸ்ரீ ராம் நகர் ஆறாவது வீதியில் அமைந்துள்ள மரமொன்று அதே பகுதியில் அருள் நகர் அருகில் உள்ள மரம் ஒன்றும் இந்த இரு மரங்களும் அந்தப் பகுதியில் வாழும் மக்களை அச்சுறுத்தி வருகிறது சுமார் 600 குடும்பங்கள் 2500 பொதுமக்கள் பயணிக்கும்  இந்த பகுதியில் அடி வேரில் கரையான் புற்று அரிக்கப்பட்ட நிலையில் எந்த நேரத்திலும் இந்த மரம் விழுந்து உயிர் சேதம் ஏற்படுத்தும் அச்சம் நிலவுகிறது.

இது சம்பந்தமாக, மக்கள் விழிப்புணர்வு அமைப்பின் கோவை மாவட்ட அமைப்பாளர் ராஜேந்திரன் கூறுகையில்:

நான் சென்ற வாரம் அந்தப் பகுதியில் சென்று கொண்டிருக்கும் பொழுது திடீரென அந்தப் பகுதியில் இருக்கும் இரு மரங்களையும் கண்டு அதிர்ந்து போனேன் சிறு காற்று அடித்தாலும் மழை பொழிந்தாலும் நிச்சயம் அந்த இரு மரங்களும் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிகிறது இதனை உடனடியாக கவனத்தில் கொண்டு அந்தப் பகுதி மக்களை காக்கும் விதமாக மாநகராட்சி நிர்வாகம் இந்த இரு மரங்களை அகற்றி தரவேண்டும் என்று மக்கள் விழிப்பு அமைப்பு சார்பாக அந்த பகுதி பொதுமக்களும்  கோரிக்கை விடுகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தமிழக தலைமை நிருபர், 

-ஈசா.

Comments