கன்டெய்னர் லாரி மோதி மரம் முறிந்து காரின் மீது விழுந்தது! ஓட்டுனர் அதிர்ச்சி!

 

-MMH

    கோவையை அடுத்த ஒத்தக்கால் மண்டபம் அருகே சீராபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ்(35) கால் டாக்ஸி டிரைவர். இவர் வாடிக்கையாளர்களை காரில் ஏற்றிக்கொண்டு கோவை தொடர்வண்டி நிலையம் வந்து அவர்களை அங்கே இறக்கிவிட்டார். பின்னர் அங்கிருந்து கணபதி  நோக்கி சென்றார் அவ்வாறு செல்லும்போது போலீஸ் கமிஷனர் அலுவலகம் பின்புறம் உள்ள சாலையின் வழியாக சென்றார் அப்போது அவருக்கு முன்னால் ஒரு கன்டெய்னர் லாரி சென்று கொண்டு இருந்தது .அவ்வாறு சென்று கொண்டிருந்த கன்டெய்னர்  லாரி மோதி  மரம் முறிந்து பின்னால் வந்துகொண்டிருந்த வெங்கடேஷ் ஓட்டி வந்த காரின் மீது விழுந்தது. இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது .மேலும் காரின் முன்பக்க கண்ணாடியும் உடைந்தது.

இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து காருக்குள் சிக்கி இருந்த வெங்கடேஷ்சை பத்திரமாக மீட்டனர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த கோவை தெற்கு தீயணைப்பு நிலைய அதிகாரி வேலுச்சாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் காரின் மீது விழுந்து கிடந்த மரக்கிளையை வெட்டி அகற்றினர். மேலும் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து மரத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற கன்டெய்னர் லாரி குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாளைய வரலாறு கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments