போத்தனூர் வெள்ளலூர் ரோட்டில் நிவாரணப் பொருள்கள் வழங்கிய குறிச்சி பிரபாகரன் மற்றும் SA காதர்!! மக்கள் மகிழ்ச்சி!!

       -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீ ராம் நகர் பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் அத்தியாவசிய உணவுப்பொருள் வழங்குதல் திட்டம் தொடங்கியது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை கோரத்தாண்டவம் ஆடி பல மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாகியுள்ளது.

இதனடிப்படையில் பொது மக்களுக்கு உதவும் வகையில் தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தின் கீழ்  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த மாதம் முதல் தமிழகம் முழுவதும் வீடுவீடாக ரேஷன் அட்டைதாரர்கள்  கணக்கெடுக்கப்பட்டு, டோக்கன் வழங்கி, உணவுப் பொருள் விநியோகிக்கும் பணி தொடங்கப்பட்டது.

அதன் தொடர் நிகழ்வாக கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோடு 99 வது டிவிஷனுக்கு உட்பட்ட வெள்ளலூர் ரோட்டில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று டோக்கன் விநியோகிக்கப்பட்ட ரேஷன் அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் நிவாரணப் பொருள் சிறப்பாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் 99 வது கழக வட்ட செயலாளர் முரளிதரன் B.A அவர்கள் தலைமை தாங்க கோவை கிழக்கு மாவட்ட கழக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் மற்றும் குறிச்சி வடக்கு பகுதி கழக பொறுப்பாளர் எஸ்.ஏ.காதர் இருவரும் இணைந்து கொரோனா நிவாரண பொருட்கள், பொதுமக்களுக்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் வழங்கினார். மற்றும் குறிச்சி வடக்கு கிழக்கு வட்ட பொறுப்பாளர்கள் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு மன மகிழ்ச்சியோடு வாங்கி சென்றனர்.

-தமிழக தலைமை நிருபர்,

ஈசா.

Comments