கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து ஏற்மாற்றிய நபருக்கு 10 ஆண்டுகள் சிறை!!

-MMH 

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, சரளை பகுதியை பாஸ்கரன் மற்றும் கம்புளியாம்பட்டி பகுதியை சேர்ந்த குமார் ஆகியோர் இணைந்து சரளை பகுதியில் பாஸ் பவுலட்ரி பாம்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கி 1 லட்சம் முதலீடு செய்தால் நாட்டுக்கோழி கொடுத்து அதனை பராமரிக்க மாதம் 8000 கொடுப்பதாகவும் மேற்படி நிறுவனத்தில் VIP திட்டத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 9000 ஊக்கத்தொகையாகவும் வருட முடிவில் ஊக்கத்தொகையாக 9000 கொடுப்பதாகவும் மூன்று வருடங்கள் முடித்து முதலீட்டு தொகையை திருப்பி அளிப்பதாகவும் விளம்பரம் செய்துள்ளனர். இந்நிலையில் 98 முதலீட்டாளர்களிடம் இருந்து 1 கோடியே 38 லட்சத்து 98 ஆயிரத்து 500 ரூபாய் வசூல் செய்யப்பட்ட நிலையில் தொகையை திருப்பி தராமல் அலுவலகத்தை பூட்டி விட்டு தலைமறைவானதாக பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இந்த சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சேகர் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 76 லட்சம் ரூபாய் அபராதமும் குமார் என்பவரை வழக்கிலிருந்து விடுவித்த நீதிபதி ரவி உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து சேகர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

-சீனி, போத்தனூர்.

Comments