கோவை மாவட்டத்தில் தற்போதைய கொரோனா நிலவரம்! 140 பேருக்கு புதிதாக தொற்று!! 5 பேர் பலி!!

   -MMH

கோவையில் நேற்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 45 ஆயிரத்து 647 ஆக உயர்ந்துள்ளது. கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த 67 வயது முதியவர், 74 வயது முதியவர், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி, இ.எஸ்.ஐ மருத்துவமனை யில் சிகிச்சை பெற்றுவந்த 54 வயது பெண், 60 வயது பெண் ஆகிய 5 பேர் பலியானார்கள். 

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,397 ஆக உயர்ந்துள்ளது.  மேலும் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கொரோனா மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 152 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதன் மூலம் இதுவரை 2 லட்சத்து 45 ஆயிரத்து 647 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 1,471 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments