சிங்கம்புணரியில் தேசத்தந்தையின் 153வது பிறந்தநாள் கொண்டாட்டம்! மகாத்மா காந்தி நகர் பொதுமக்கள் உற்சாகம்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி மகாத்மா காந்தி நகரில் வசிக்கும் மக்கள் அண்ணல் காந்தியடிகளின் 153வது பிறந்த தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடினர்.
விழாவில் அப்பகுதியிலுள்ள சிறுவர் சிறுமிகளுக்கு விளையாட்டுப்போட்டிகள் மற்றும் பேச்சுப்போட்டிகள் உற்சாகத்துடன் நடத்தப்பட்டன.
அதைத் தொடர்ந்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அருணகிரி அண்ணல் காந்தியடிகளின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.அதன் பின்னர் சிறுமி நிவேதா மகாத்மா காந்தியைப் பற்றி உரை நிகழ்த்தினார். பல சிறுமிகள் மகாத்மா காந்தியை பற்றிய பாடல்கள் பாடினார்கள்.
நிகழ்ச்சிக்கு தொழிலதிபர் ராமுடு தலைமையேற்றார். தேமுதிக ஒன்றியச்செயலாளர் ராம்தாஸ், காங்கிரஸ் வட்டாரத்தலைவர் ஜெயராமன், காங்கிரஸ் தலைமை நிலைய பேச்சாளர் சிங்கை தருமன், முன்னாள் பேராசிரியர் காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் பேரூராட்சி முன்னாள் தலைவர் சோமசுந்தரம், TAPCMS துணைத்தலைவர் இந்தியன் செந்தில், குழந்தைவேலன், கதிர்காமன், அதிமுக தலைமைக்கழக பேச்சாளர் உதயக்குமார், காந்திநகர் வேம்பு, வாசவி சரவணன், ஐஸ் சங்கர், உதயக்குமார், பான்ஸ்டால் செந்தில், குருசாமி கௌரிசங்கர், பட்டாவி ராமன், முன்னாள் காவல் சார்பு ஆய்வாளர் அந்தோணி, அரிமா லாரிசெல்வம், பேரூராட்சி எழுத்தர் அழகர்சாமி, துப்புறவு மேற்பார்வையாளர் தென்னரசு, மற்றும் அப்பகுதி பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் உற்சாகத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியாக கேஆர்.நாகராஜ் நன்றி கூறினார்.அதைத்தொடர்ந்து அனைவருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது. அண்ணல் காந்தியடிகளைப் பற்றிய சிந்தனைகளை மறவாமல் இப்பகுதி மக்கள் விழா எடுத்துக் கொண்டாடுவது மகிழத்தக்கது.- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.
Comments