விளம்பரப் பலகையை அகற்ற 17ஆம் தேதி வரை கெடு!!

   -MMH

     கோவை மாவட்டத்தில் சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்புகளின் படியும் தலைமை செயலாளர் அறிவுறுத்தலின் படியும் கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள், மாநகராட்சி சாலைகள், உள்ளாட்சி அமைப்புக்கு சொந்தமான சாலைகள், நடைபாதைகள் ஆகிய இடங்களில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள், கொடிக்கம்பங்கள் ஆகியவை உடனடியாக அகற்ற வேண்டுமெனவும் இதில் தனி நபர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் ஆல் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், கொடிக்கம்பங்கள் ஆகியவற்றை அக்டோபர் 17 க்குள் அகற்ற  வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி உள்ளாட்சி அமைப்பினரால் மற்றும் வருவாய்த் துறையினரால் மூலம் அவை அகற்றப்படும். 


அகற்றுவதற்கு ஆகும் செலவு சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மற்றும் அமைப்பினரிடம் இருந்து வசூலிக்கப்படும் என்று கலெக்டர் சமீர் தெரிவித்துள்ளார்.

-அருண்குமார், கிணத்துக்கடவு.

Comments