உலகம்பட்டி அருகே சட்டவிரோதமாக மது விற்ற 2 பேர் கைது! விஷநெடியுடன் திரவமும், 19 மதுபாட்டில்களும் பறிமுதல்!

 

 -MMH

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், உலகம்பட்டியில் உள்ள மதுபானக்கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக உலகம்பட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது.

தீவிர விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினருக்கு உரத்துப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வராஜ்(38), குருநாதன் மகன் கமலநாதன்(48) இருவரும் உலகம்பட்டி மதுபானக்கடை அருகே 19 மதுபாட்டில்களுடன் சட்டவிரோதமாக விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.


அங்கு சென்ற உலகம்பட்டி காவல்துறையினர் அவர்களிடமிருந்த 19 மதுபாட்டில்களையும், விஷநெடியுடன் கூடிய திரவம் இருந்த ஒரு பாட்டிலையும் பறிமுதல் செய்தனர். செல்வராஜ் மற்றும் கமலநாதனை கைது செய்து சிங்கம்புணரி நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேர்நிறுத்தி  சிவகங்கை கிளைச்சிறையில்  அடைத்தனர்.

- அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments