சேரன்மாநகர், ஆன்லைன் கேமில் 23000 இழந்த சிறுவன்..!! பெற்றோர் கண்டித்ததால் மாயம்..!!!

-MMH

   சேரன் மாநகர் பகுதியில் செல்போனில் ஆன்லைன் மூலம் கேம் விளையாடி ரூபாய் 23000 இழந்த சிறுவன் பெற்றோர் கண்டித்ததால் மாயம். கோவை சேரன்மாநகர் பகுதியை சேர்ந்தவர் விஜய் அமிர்தராஜ் வயது 49 இவர் கால் டாக்ஸி டிரைவராக பணிபுரிந்து வருகிறார் இவரது 16 வயது இளைய மகன்  செல்போன் மூலம் ஆன்லைனில் படித்து வந்துள்ளார். ஆன்லைனில் படிப்பதற்காக வாங்கி கொடுத்த மொபைல் போன் மூலம் ஆன்லைன் கேம் விளையாடி உள்ளார். தன் அம்மாவின் செல்போனின் மூலம் ஆன்லைன் கேம் விளையாடுவதற்காக ரூபாய் 23000 பணம் செலுத்தி உள்ளார். இதை அறிந்த விஜய் அமிர்தராஜ் மகனை கண்டித்துள்ளார், இதனால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட  சிறுவன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார், நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாததால்  விஜய் அமிர்தராஜ் பீளமேடு  காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

சமீப காலங்களில் ஆன்லைனில் மோசடி வெகுவாக நடந்துவருவது செய்திகள் மூலம் வலைதளங்களின் மூலம் நாம் அறிந்து வருகிறோம். இதைப்பற்றி பலவிதமான விழிப்புணர்வு செய்திகளும் வலைதளங்களின் மூலம் நமக்கு வந்து கொண்டுதான் இருக்கிறது. இருப்பினும் சிறுவர்களை வைத்து ஆன்லைன் கேம் என்னும் போர்வையில் பண மோசடியில் பல நிறுவனங்கள் ஈடுபட்டு வருகிறது. ஆகவே பெற்றோர்கள் சற்று கவனத்துடன் இருந்து தங்கள் குழந்தைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சமூக  ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக

-முஹம்மது சாதிக் அலி.

Comments