இருவேறு இடங்களில் நடந்த விபத்திளால் பெண் உட்பட 2 பேர் பலி ; சாலையில் கவனம்! வாகனஓட்டிகளே நிதானம்!!

 

  -MMH

   கோவை பாப்பநாயக்கன்பாளையம் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்தவர் பண்ணாரி (வயது 54). இவருடைய மனைவி பாபா (45). இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். காந்திபுரம் 100 அடி ரோட்டில் சென்ற போது பின்னால் அமர்ந்திருந்த பாபா மோட்டார் சைக்கிளில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். 

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு (கிழக்கு) போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் ரூபா நகரை சேர்ந்தவர் ஜோஸ் (வயது 60). இவர் சம்பவத்தன்று மொபட்டில் சுங்கம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே பாலஹரிஹரன் (25) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த ஜோசை மீட்டு அங்கிருந்தவர்கள் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments