பொன்னமராவதி அருகே 300 அடி உயரத்தில் போராட்டம் நடத்திய கல்லூரி மாணவர்! பாதுகாப்பாக மீட்கப்பட்டார்!

 

-MMH

      காவல்துறை, வருவாய்துறை மற்றும் தீயணைப்பு துறை அதிகாரிகளின் கனிவான பேச்சால் 300 அடி உயரத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் பாதுகாக்க மீட்கப்பட்டார்..

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள தேனிமலை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் சண்முகம் (வயது21). கல்லூரி மாணவரான இவர் தேனிமலையில் சுமார் 300 அடி உயரத்தில் உள்ள முருகன் கோயில் மலை உச்சியில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த பொன்னமராவதி காவல் ஆய்வாளர் தனபாலன், சார்பு ஆய்வாளர் ரகுராம் மற்றும் தீயணைப்பு துறையினர் மலையுச்சியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞரின் அருகில் சென்று விசாரித்தனர். அப்போது சண்முகம், தமிழகத்தில் ஜாதியை ஒழிக்க வேண்டும், மதுக்கடைகளை மூடவேண்டும், சீமைக்கருவேல மரங்கள் மற்றும் தைலமரங்களை அகற்ற வேண்டும் உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவதாக கூறினர்.

இதனையடுத்து தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் கனிவான பேச்சுவார்த்தையில் அந்த இளைஞர் மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பது தெரியவந்தது.

அதன்பின்பு, அந்த கல்லூரி மாணவர் 300 அடி உயர மலையிலிருந்து கீழே இறங்கி வரச் சம்மதித்தார். அவரை பாதுகாப்பாக அழைத்து வந்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக வலையபட்டி அரசு பாப்பாயி ஆச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

-பாரூக், அப்துல்சலாம்.

Comments