3 மாத பெண் குழந்தையை கொடூரமாக கொன்ற தாய்க்கிழவி க்கு சிறை..!!

  -MMH

   துடியலூர் அருகே 3 மாத குழந்தையின் பிறப்பு உறுப்பை அறுத்து கொன்றுவிட்டு பேத்தியை கழிவறையில் அமுக்கி கொலை முயற்சி செய்த பாட்டி கைது.

கவுண்டம்பாளையம் சேரன் நகர், நாகப்ப தெரு 3வது வீதியில் வசித்து வருபவர்கள் பாஸ்கரன் ஐஸ்வர்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த 3 மாதத்துக்கு முன்பு ஒரு ஆண் ஒரு பெண் என்று இரட்டை குழந்தைகள் பிறந்தது. இவர்கள் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2 மாதத்துக்கு முன்பு கோவைக்கு இடம்பெயர்ந்த இவர்கள் ஐஸ்வர்யாவின் தாய் சாந்தியையும் தன்னுடைய குழந்தைகளை  கவனித்துக்கொள்ள  உடன் அழைத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி இரவு ஐஸ்வர்யா தனது சகோதரனுடன் மருந்து கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது  தாய் சாந்தி தனது  3 வயது ஆண் குழந்தை வருணின் பிறப்பு உறுப்பை அறுத்து கொன்றதும் மேலும்  பெண்  குழந்தையான வருண்ஸ்ரீயை கழிவறையில் அழுத்தி கொலை செய்ய முயற்சி செய்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்து தன் கணவரின் மூலம் துடியலூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்துள்ளார்கள். அதற்குள் சாந்தி தப்பிச் செல்லவே போலீசார் தனிப்படை அமைத்து சாந்தியை தேடி வந்தனர். 

இந்நிலையில் சாந்தி மதுரையில் தன் உறவினர் ஒருவர் வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்ததன் பேரில் போலீசார் அங்கு சென்று சாந்தியை கைது செய்து கோவைக்கு அழைத்து வந்தனர். 

அங்கு அவரிடத்தில் விசாரணை செய்ததில் சாந்தி தன் மகள் ஐஸ்வர்யா வெளியே சென்றது வரைக்கும் தான் தனக்கு ஞாபகம் இருப்பதாகவும் அதற்குப் பின்னர் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியவில்லை என்றும் தன் மகள் ஐஸ்வர்யா திரும்ப வீட்டுக்கு வந்து தன்னை அடித்த பின்பு தான் நிலைமையை உணர்ந்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். 

இவர் பல வருடங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து சாந்திக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் ஆஜர் செய்த போலீசார் மாஜிஸ்ட்ரேட் உத்தரவின் பேரில் சாந்தியை சிறையில் அடைத்தனர். சாந்தியின் கணவர் மதுரை மதிச்சியம் காவல் நிலையத்தில் S.S.I ஆக பணிபுரிந்து வருகிறார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகம்மது சாதிக் அலி.

Comments