வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூரில் அதிமுகவின் 50வது ஆண்டு பொன்விழா வெகு விமர்சையாக அனுசரிப்பு!!

 -MMH

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் பகுதியில் உள்ள திரு முருக கிருபானந்த வாரியார் கோவில் அருகே அதிமுக ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு வேலூட் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் கே.பி.ரமேஷ் தலைமையில் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் ஜெயலலிதா ஆகியோரின் திருஉருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

பின்னர் மூத்த நிர்வாகிகளுக்கு வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு பொன்னாடை போற்றி அவர்களை கவுரவித்தார் பின்னர் அங்கிருந்த நலிந்த மக்களுக்கு நலத்திட்ட உதவி மற்றும் அன்னதானம் வழங்கபட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

-ரமேஷ்,வேலூர்.

Comments