கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 7 ஆம் ஆண்டு விழா மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் 99 வது பிறந்தநாள் விழா பேரூரில் வெகு விமர்சியாக நடைபெற்றது !

 

-MMH

    கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 7 ஆம் ஆண்டு விழா மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் 99 வது பிறந்தநாள் விழா பேரூரில் வெகு விமர்சியாக நடைபெற்றது. கோவை மாவட்ட நடிகர் சங்கத்தின் 7 ஆம் ஆண்டு விழா மற்றும் சங்கரதாஸ் சுவாமிகளின் 99 வது பிறந்தநாள் விழாவை கோவை பேரூர் ஆதீனம் கல்லூரியில் பல்வேறு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

டாக்டர் ஐசரி கணேசன் மற்றும் இயக்குனர் பாக்கியராஜ் வழிகாட்டுதலின் படியும், கோவை மாவட்ட நடிகர் சங்கத் தலைவர் அஜ்மீர் சாகுல் தலைமையிலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி மிமிக்கிரி, நாடகம் குழந்தைகளின் ஆடல் பாடல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் இதில் மூத்த நாடக நடிகர்களுக்கும்,  மேடை நிகழ்ச்சியில் தங்களது திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்து கௌரவிக்கப்பட்டது.

- சீனி,போத்தனூர்.

Comments