இளம் பெண்கள் அளித்த வாக்குமூலம் நகல் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரிடம் வழங்கப்பட்டது!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2019-ம் ஆண்டு அளித்த புகாரில் பெண்களை ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டி நகை, பணம் பறிப்பில் சிலர் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. 

இந்த சம்பவம் தொடர் பாக பல வீடியோக்கள் வெளியாகி பரபரப் பை ஏற்படுத்தியது. எனவே இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த குமார், மணிவண்ணன் ஆகிய 5 பேர் மீது அதே ஆண்டான 2019-ம் ஆண்டு மே மாதம் சி.பி.ஐ முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. 

சி.பி.ஐ. நடத்திய தொடர் விசாரணையில், அடுத்தடுத்து பாதிக்கப் பட்ட இளம்பெண்கள் புகார் அளித்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் ஹேரென் பால், பாபு மற்றும் அ.தி.மு.கவை சேர்ந்த அருளானந்தம் ஆகிய மேலும் 3 பேரை சி.பி.ஐ. கைது செய்தது. 

கடந்த ஆகஸ்டு மாதம் அருண்குமார் என்ற வாலிபரை சி.பி.ஐ கைது செய்தது. இதுவரை 8 இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர். இதை யடுத்து, கடந்த ஆகஸ்டு மாதம் 27 -ந் தேதி சி.பி.ஐ கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. 1000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரி கையில், 64 சாட்சியங்கள், 71 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

கோவை மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசார ணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் கைதான 9 பேரும் நீதிமன்றத் தில் நேரடியாக ஆஜர்படுத்தப்பட்டனர். கோர்ட்டின் கதவு அடைக் கப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்றது. 

அப்போது, பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் அளித்த வாக்குமூலத் தின் நகல் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் வழங்கப்பட்டது. வழக்கு விசாரணை 28-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே, கைதான 9 பேருக்கும் கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்ட நிலையில், விடுபட்ட சில நகல்களான பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த வாக்குமூலத்தில் நகல்கள் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வழக்கு விசாரணைக்கு பிறகு திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5 பேரையும் சேலம் மத்திய சிறையிலும், அருளானந்தம், ஹேரென் பால், பாபு, அருண்குமார் ஆகிய 4 பேரும் கோபி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர். அடுத்த விசாரணையின்போது, 9 பேர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments