சிங்கம்புணரி சேவுகமூர்த்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தில் ஆயுத பூஜை விழா!

 

  -MMH

   சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கார் ஓட்டுநர் சங்கத்தில் ஆயுத பூஜை விழா!அமைச்சரின் சொந்த நிதியிலிருந்து சீருடைகள் வழங்கப்பட்டன!

சிங்கம்புணரி பேருந்து நிலையத்தின் உள்புறம் அமைந்துள்ள சேவுகமூர்த்தி வாடகை கார் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தில் நேற்று ஆயுத பூஜை விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இந்த விழாவில் சங்கத்தின் தலைவரும், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத் தலைவரும், TAPCMS கூட்டுறவு சங்கத் தலைவருமான இந்தியன் செந்தில் மற்றும் முன்னாள் கவுன்சிலரும், சங்கத்தின் செயலாளருமான திருமாறன் ஆகியோர் கலந்துகொண்டு, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அவர்களது சொந்த நிதியிலிருந்து தரப்பட்ட சீருடைகளை 55 ஓட்டுனர்களுக்கு வழங்கினர்.

அதேபோல், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தில் நடைபெற்ற ஆயுத பூஜை விழாவில் சங்கத் தலைவர் இந்தியன் செந்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இராம.அருணகிரி, கேபிள் ஆபரேட்டர்கள் சலீம், வாசவி சரவணன், தாமோதரன், சேவுகமூர்த்தி மற்றும் அலாவுதீன் யாகூப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments