பெத்த மனசு பித்து பிள்ளை மனம் கல்லு..!! காதலின் வலி கல்லறை ..!! கதறிய தாய்..!!

-MMH

    சரவணம்பட்டி பகுதியில் காதலி இறந்த துக்கம் தாங்காமல் காதலன் விஷம் குடித்து தற்கொலை. போலீசார் விசாரணை. நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் ரவி  இவரது மகன் பிரகாஷ் வயது 24 M.s.c பட்டதாரியான இவர் ஒரு தனியார் கம்பெனியில் விற்பனைப் பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். பிரகாஷ் சரவணம்பட்டி இல்லை LGB லே-அவுட் என்ற பகுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரு  இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்தப் பெண் 6 மாதத்துக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. காதலி இறந்த நாளிலிருந்தே துக்கத்தில் இருந்த பிரகாஷ் திடீரென்று நேற்று விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.


 மயங்கிய நிலையில் இருந்த பிரகாஷை கண்டு அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பிரகாஷை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார். காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு  சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்  பிரேதத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தன் இறந்துபோன காதலிக்காக உயிரை மாய்த்துக் கொண்ட பிரகாஷ்சை நினைத்து கண்ணீர் சிந்திய நண்பர்களைப் பார்த்தவர்களின் உள்ளம் வெம்பியது  என்பதே உண்மை. பிள்ளையை இழந்து பெற்றோரின் கதறல் நெஞ்சை உளுக்கியது.  

"""தற்கொலை நமக்குக் கிடைக்கும்

விடுதலை அல்ல..!

நாம் நம்மவர்களுக்கு

அளிக்கும் தண்டனை..!! """"என்று ஒரு சமூக சிந்தனையுடன்

நாளைய வரலாறு செய்திக்காக

-முகம்மது சாதிக் அலி.

Comments