அந்தக் காலம் அது அது வசந்த காலம்..!! பழைய காலத்தை நினைவூட்டிய பஜாஜ் ஸ்கூட்டர்..!!

 -MMH

 திருப்பூர் to பல்லடம் சாலை காலை நேரம் என் அலுவலகப் பணிகளுக்காக நான் சென்று கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னாடி சற்று தொலைவில் இன்றைய நவீன மாடல் வாகனத்திற்கு மத்தியில் என் தந்தை காலத்தில் நாம ஆச்சரியமாக பார்க்கப்பட்ட, மாப்பிள்ளைக்கு கல்யாணத்துக்கு சீர்வரிசை ஒரு ஸ்கூட்டர் வாங்கி கொடுத்தாள் அது பெருமை என்று இருந்த  காலகட்டங்களில் வெகுவாகப் பேசப்பட்டது.

தான் இந்த பஜாஜ் ஸ்கூட்டர். நாம் பார்த்திருப்போம் ஒரு குடும்பத்தையே அதில் ஏற்றிச்செல்லும் குடும்பத் தலைவரின் அழகை. ஹேண்ட் பகியர், ஸ்டெப்னி, இரண்டு சிங்கிள் சீட் போன்ற அம்சங்களைக் கொண்ட இந்த ஸ்கூட்டர் என் பழைய நினைவுகளில் மூழ்கடிக்க செய்தது. 

ஆகவே நான் என் போன் கேமரா மூலம் ஒரு கிளிக் செய்து  உங்கள் அனைவரையும் என் நினைவுகளோடு உங்களை என்  இனிமையான பயணத்தில்  சேர்க்க இதோ  நாளைய வரலாறு பத்திரிக்கையின் வாயிலாக  உங்களின் பார்வைக்காக.


நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா,திருப்பூர்.

Comments