வாக்கு பெட்டிகளுக்கு காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ; வாக்கு எண்ணிக்கைக்கு போட்டியாளர்கள் காத்திருப்பு! !

 

    -MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் தென்குமாரபாளையம், ஆனைமலை ஒன்றியம் திவான்சாபுதூரில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கும், ஜமீன்முத்தூர் ஊராட்சியில் 6-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் 9-ந்தேதி நடந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், அன்று இரவே அந்தந்த ஒன்றிய அலுவலகத்துக்கு வாக்குபெட்டிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. தென்குமாரபாளையம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பொள்ளாச்சி சி.டி.சி மேட்டில் உள்ள அம்மா திருமண மண்டபத்திலும், திவான்சாபுதூர் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை ஆனைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும். ஜமீன்முத்தூர் 4--வது வார்டு கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகே உள்ள வடக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் நாளை (செவ்வாய்கிழமை) காலை 8 மணி அளவில் நடைபெறுகிறது.

கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் ஊராட்சி 2-வது வார்டு உறுப்பினர் தேர்தல் நேற்று முன்தினம் நெ.10 முத்தூர் அரசு நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்கு பதிவு நடைபெற்றது. இதில் 144 ஆண்களும், 144 பெண்களும் என 288 பேர் வாக்களித்தனர். இது 75 சதவீத வாக்குப்பதிவு.

வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப் பெட்டியில் சீல் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்புடன் கிணத்துக் கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உள்ள அறையில் ஓட்டுப் பெட்டிகள் இறக்கி வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. அங்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். போலீஸ் துணை சூப்பிரண்டு தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 34 போலீசார் 3 பிரிவுகளாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுல்தான்பேட்டை ஒன்றியம் போகம்பட்டி ஊராட்சியில் 6 -வது வார்டு உறுப்பினர் பதவிக்கு 4 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்தது.  இதில், 79 சதவீத வாக்குகள் பதிவாகின. வாக்குப்பதிவு முடிந்தபின்னர் வாக்குப்பெட்டி சுல்தான்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது. அங்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்ட உள்ளது. 

இந்நிலையில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வாக்குப் பெட்டிகள் வைத்து சீல் வைத்து பூட்டி வைக்கப்பட்டுள்ள தனி அறை அருகே போலீசார் 24மணிநேரமும் துப்பாக்கி ஏந்திபாகாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஒன்றிய அலவலகத்தை சுற்றிலும் 5 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு மற்றும் ஒன்றிய அலுவலகத் தில் ஆங்காங்கே கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டு, கண்காணிக் கப்படுகிறது. நாளை வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்

நாளைய வரலாறு  செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர், 

-S.ராஜேந்திரன்.

Comments