வீடுகளுக்கே சென்று கொரொனா தடுப்பூசி செலுத்திய சுகாதாரத்துறை மக்கள் மகிழ்ச்சி!!

   -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் செட்டிபாளையம் ரோடு ஸ்ரீ ராம் நகர் பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி வீடு வீடாக சென்று செலுத்தப்பட்டு வருகிறது, நோய் தொற்றை தடுக்கும் விதமாக சுகாதாரத்துறை அறிவுறுத்தலின் படி கோவை மாநகராட்சி சார்பாக சுகாதாரத் துறை ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வையில் F S W TEAM DBC அனிமேட்டர் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக  இன்று போத்தனூர் ஸ்ரீராம் நகர் சுற்று வட்டார பகுதியில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. 

ஸ்ரீராம் நகர் பகுதியில் வசிக்கும் மக்கள் கூறுகையில்  தடுப்பூசி போட்டுக் கொள்ள டோக்கன்கள் வழங்கப்பட்டு  நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்துவது சிரமமாக இருந்த நிலையில், மக்களுக்கு எளிய முறையில்  வீடுவீடாக தடுப்பூசி செலுத்துவது மன மகிழ்ச்சி அளிப்பதாக கூறி வருகிறார்கள். 

மேலும் கொரோனா  நோய்த்தொற்றை தடுக்கும் விதமாக அரசு எடுத்த இந்த முயற்சிக்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இன்று அவர்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்கள். இதுபோன்று அரசு, மக்களை காக்கும் விதமாக வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தி வருவதால் நோய் தொற்று தடுக்க முடியும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மகிழ்ச்சியோடு கூறி கொள்வதோடு அரசுக்கு நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக தலைமை நிருபர்,

-ஈசா.

Comments