சேலத்தில் பூட்டிய வீட்டில் பெட்டிக்குள் பெண்ணின் உடல்..! அஸ்தம்பட்டில் பரபரப்பு.!!

 

-MMH

           


               சேலத்தில் பூட்டிய வீட்டில் பெட்டிக்குள் கொலை செய்யப்பட்டு கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பெண்ணின் உடலை இன்று கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை பரபரப்பு. 

சேலம் அஸ்தம்பட்டி குமரசமிபட்டி பகுதியில் நடேசன் என்பவருக்கு சொந்தமான சண்முகா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது இந்த அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ள பிரதாப் என்பவர் சென்னையில் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார் பிரதாப் அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் நடேசன் என்பவருக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டில் யாரும் தொலைபேசி எடுக்கவில்லை சற்று போய் பார்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் குடியிருப்பின் உரிமையாளர் நடேசன் வீட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு துர்நாற்றம் வீசுவதை அறிந்த அவர் அஸ்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார் துணை ஆணையாளர் மாடசாமி அஸ்தம்பட்டி உதவி ஆணையாளர் ஆல்பர்ட் காவல் ஆய்வாளர் மகேஸ்வரி உள்ளிட்ட காவலர்கள் விரைந்து சென்று வீட்டை உடைத்து உள்ளே சென்றபோது வீடு முழுவதும் துர்நாற்றம் வீசத் தொடங்கியது சோதனை செய்ததில் வீட்டின் மேல் அலமாரியின் சூட்கேசில் இருந்து துர்நாற்றம் வருவதை . அறிந்த காவல்துறையினர் சூட்கேசை மீட்டு பிரித்து பார்த்ததில் கொலை செய்து பெண்ணின் கை கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில்  சடலமாக கிடந்தார்.

இதனை அடுத்து காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் கொலை செய்து  பெண்ணை கட்டி சூட்கேசில் வைத்தது யார் எதற்காக வைத்தார்கள் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர்  முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த பெண் சுமார் ஐந்து நாட்களுக்கு முன் பெட்டியில் வைத்து இருக்கலாம் என்றும் இறந்த  பெண் தேஜ்மண்டல் என்பதும்  இவருடைய கணவர் சென்னையில் வேலை பார்த்து வருவதும் தெரியவந்தது மேலும் தேஜ் மெண்டல் சேலம் மாநகரில் தேஜ் அழகு நிலையம் என்ற பெயரில் பேர்லண்ஸ், சங்கர் நகர் உள்ளிட்ட மூன்று இடங்களில் அழகு நிலையம் நடத்தி வருவதும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த மாதத்தில் பள்ளப்பட்டி, அஸ்தம்பட்டி உள்ளிட்ட காவல்நிலையத்தில் அழகு நிலையத்தில் தேஜ் மண்டல் மீது, விபச்சாரம் நடத்திய தாக வழக்கு  உள்ளதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக அழகு நிலையங்களில் காவல்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வந்த வேளையில் தற்போது அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டினுள் கை கால்கள் கட்டப்பட்டு பெட்டியில் அழுகிய நிலையில் பெண்ணின் உடலை கைப்பற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-சோலை சேலம். 

Comments