வடிவேலு பட காமெடி பாணியில் இரு சக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்...!!

 

-MMH

    கணபதி பகுதியில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி பார்ப்பதாக கூறிவிட்டு திருடிச் சென்ற மர்ம நபர் போலீசார் விசாரணை. கணபதி அடுத்த சக்தி சாலையில் சபரி ஆட்டோ கன்சல்டிங் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் சீனிவாசன்( வயது 43 ) நேற்று அதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தான் ஒரு இருசக்கர வாகனம் வாங்க வந்துள்ளதாகவும், வாங்குவதற்கு முன் வண்டியை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 

அந்நிறுவன பணியாளரும் ஓட்டிப் பார்க்க வாகனத்தை தந்துள்ளார், வண்டியை ஓட்டிச் சென்ற மர்ம நபர் திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத நிறுவனத்தினர் தாங்கள்  ஏமாந்ததை அறிந்துகொண்டு சரவணம்பட்டி காவல் நிலையத்தில் இதை பற்றி புகார் அளித்தனர். அருகாமையில் இருக்கும் சிசிடிவி பதிவுகளை வைத்து போலீசார் மர்ம நபரைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். வடிவேலு படத்தில் வரும் காமெடி சீனை போல் நடந்த இந்த இரு சக்கர வாகன திருட்டு அப்பகுதியில் பரபரப்பையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக

-முகம்மது சாதிக் அலி.

Comments