சேலத்தில் ரெய்டு! ஆடிப்போன எடப்பாடி பழனிசாமி!! மலைத்துப்போன அதிகாரிகள்!!!

     -MMH

நேற்று முதல் அதிமுக பரபரப்பில் இருக்கிறது. முக்கியமாக கொங்கு மண்டலத்தில் பரபரப்பிற்கு பஞ்சமில்லை. முன்னாள் முதல்வர் 
எடப்பாடி பழனிசாமி தனியாக அறிக்கைவிடும் அளவிற்கு அப்படி யார் வீட்டில்தான் சோதனை நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர், சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துவருபவர்தான் சேலம் பெத்தநாயக்கன்பாளையம் இளங்கோவன். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையாக செயல்பட்டுவரும் இளங்கோவன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கித் தலைவராக 2013 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஆத்தூர் அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவனுக்கோ ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். ஆரம்பத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஒப்பந்ததாரராக தனது வாழ்க்கையை தொடங்கிய இளங்கோவன், அப்போதைய ஆத்தூர் சட்ட மன்ற உறுப்பினர் 
மஞ்சினி முருகேசனோடு இணைந்து அரசியலில் சாதாரணமாக ஈடுபட்டு  வந்தார்.


ஒரு நேரத்தில் ஜெயலலிதாவின் பார்வை இளங்கோவன் மீது பட அதிமுக-வின் மாவட்ட செயலாளர் ஆனார். தொடர்ந்து 2006ல் பனைமரத்துப்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பின்னர் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டு வீரபாண்டி எஸ்கே.செல்வத்துக்கு வழங்கப்பட்டது. உடனே இளங்கோவன்  அமைப்பு செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடம் ஐக்கியமானார். பின்னர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைதுறை  அமைச்சர் பதவி கிடைக்க அவருடனே இருந்த இளங்கோவனுக்கு சேலம் மாவட்டத்தில் ஏறுமுகம்தான்.



2016 சட்டமன்றத் தேர்தலின்போது சேலம் மாவட்டத்தில் அதிமுக தேர்தல் பணிகளை கவனிக்கும் பொறுப்பு இளங்கோவனிடம் வழங்கப்பட்டது. சேலத்தில் உள்ள 11 சட்ட மன்ற தொகுதிகளில் 10 தொகுதியை அதிமுக கைப்பற்றியது. அதற்கான செலவுகளை இளங்கோவன் கவனித்துக் கொண்டதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். இது மேலும் அதிமுகவுக்குள் இளங்கோவன் செல்வாக்கு உயரக் காரணமானது. 


இதை தொடர்ந்து சசிகலா, தினகரன், ஓ.பன்னீர்செல்வம் என அனைவரின் ஆதரவையும் பெற்று அதிமுகவின் உள்வட்டத்துகுள் தமிழக அளவில் வலம் வரத்தொடங்கினார் என்பதைவிட பல அமைச்சர்களை தன்னைத்தேடி வரவழைத்தார். தொடர்ந்து ஜெ பேரவை மாவட்ட செயலாளர் கூட்டுறவு வங்கி தலைவர் பெத்தநாயக்கன்பாளையம் சேர்மன் என அடுத்ததடுத்து பதவிகள் கிடைக்க, இளங்கோவன் அதிமுகவில் அறிவிக்கப்படாத அமைச்சர் அந்தஸ்தில் இருந்தவர் ஆட்சி இருந்தவரையில்.

ஜெயலலிதா இறந்த பின் ஏற்பட்ட அரசியல் திருப்பங்களில் 
எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். இந்நிலையில் எம்எல்ஏக்களையும் அமைச்சர்களையும் கண்காணிக்கும் பொறுப்பு இளங்கோவனிடம் ஒப்படைக்கப்பட்டதாக அதிமுக உள்வட்டாரங்கள் கூறுகின்றன.


கல்வி நிறுவனங்கள், ஆம்னி பேருந்துகள், பல சொகுசு பங்களா, சேகோ பாக்டரி, இண்டஸ்டீரீஸ், திரையரங்கம் மேலும் பல நிறுவனங்கள் என்று
2013ல் தொடங்கிய அரசியல் வாழ்க்கையில் 101% சதவிகிதம் அசுர வளர்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் உள்ள இளங்கோவன் வீடு சென்னை, திருச்சி கல்வி நிறுவனம் உள்ளிட்ட 27 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர் பண மதிப்பு இழப்பின்போது சேலம் கூட்டுறவு வங்கி மூலம் 600 கோடி ரூபாய் பணம் பரிமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி, சொகுசு வெளிநாட்டு கார்கள், கல்லூரி நிறுவனர், கல்வி தந்தை என்று சேலம் இளங்கோவனை கண்டு மலைத்து போய் உள்ளனர்
லஞ்ச ஒழிப்பு துறையினர்.

-Ln.இந்திராதேவி முருகேசன், சோலை ஜெய்குமார்.

Comments