வெள்ளலூர் குளக்கரை பூங்காவில் பல வகை வண்ணத்துப்பூச்சிகள்! கணக்கெடுக்கும் பணி தீவிரம்! !

 

  -MMH

கோவையை அடுத்த வெள்ளலூரில் குளம் உள்ளது. 90 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த குளத்தை, குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பராமரித்து வருகிறார்கள். 

அத்துடன் குளக்கரையை பலப்படுத்தி மியாவாக்கி என்று அழைக்கப்படும் அடர்வனமாக மாற்றி அங்கு பூங்காவும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பூங்காவில் ஏராளமான பறவைகள், பூச்சிகள் உள்பட பல உயிரினங்கள் உள்ளன. மேலும் வண்ணத்துப்பூச்சிகளை கவர்ந்து இழுப்பதற்காக பிரத்யேக செடிகளும் நடப்பட்டன. இதனால் அங்கு ஏராளமான வண்ணத்துப்பூச்சிகள் வந்து உள்ளன. இந்த நிலையில் இங்கு வண்ணத்துப்பூச்சிகளை தனியார் அமைப்பினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அதில் ஏராளமான வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

இது குறித்து குளங்கள் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த மணிகண்டன் கூறியதாவது:- 

"கடந்த 3 ஆண்டுகளாக முன் இங்கு அடர்வனம் உருவாக்கப்பட்டு வண்ணத்துப்பூச்சிகளை ஈர்க்கும் சூழல் ஏற்படுத்தப்பட்டது. தற்போது வண்ணத்துப்பூச்சிகள் இடப்பெயர்வு செய்யக் கூடிய காலம் ஆகும்.  கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 61 வகையான வண்ணத்துப்பூச்சிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. 

அதில் 40 வகை அடையாளப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் சுற்றும் வெள்ளையன், கருஞ்சிவப்பு நுனி மூக்கன், சின்னபுல் நீலன், காமன் ரோஸ், காமன் கிராஸ் மஞ்சள் ஆகியவை குறிப்பிடத்தக்கவை ஆகும். 

இந்தப் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பட்டாம்பூச்சிகள் இருக்கலாம், அவற்றை கணக்கெடுக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது." இவ்வாறு அவர் கூறினார்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments