களக்காடு தலையணை மீண்டும் திறப்பு!!

 

   -MMH

   நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள தலையணை சுற்றுலா தலத்தில் குளிக்க சுற்றுலா பயணிகள் தனி ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பெய்த மழையின் காரணமாக தலையணையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

தடுப்பணையை மூழ்கடித்தப்படி வெள்ளம் சென்றது. இதனால் தலையணை மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டது.இதற்கிடையே கடந்த 2 நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலையில் மழை இல்லை. இதையடுத்து தலையணையில் வெள்ளம் தணிந்தது.

இதைத்தொடர்ந்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் உத்தரவுப்படி களக்காடு தலையணை நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டது. சுற்றுலா பயணிகள் செல்லவும் அனுமதி வழங்கப்பட்டது. இதையொட்டி நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் தலையணையில் குவிந்தனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் ஆனந்தமாக குளித்தனர்.

இதையொட்டி வனச்சரகர் பாலாஜி தலைமையில் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு  செய்தியாளர்,

-அன்சாரி, நெல்லை.

Comments