நகை பணம் திருட்டு..!! பூட்டிய வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை..!!
சேரன்மாநகர் அருகாமை பகுதியில் பூட்டி இருந்த வீட்டின் கதவை உடைத்து 63 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 91,000 ரொக்கப் பணம் கொள்ளை. காவல்துறை விசாரணை!
கோவை மாவட்டம் சேரன்மாநகர் அடுத்துள்ள சிவராம் நகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 44) இவர் கடந்த 2ஆம் தேதி குடும்பத்துடன் வீட்டைப் பூட்டிவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றுள்ளார் அதன்பிறகு நேற்று இரவு வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார் தன் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவராமன் உள்ளே சென்று பார்த்த பொழுது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 63 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 91,,000 ரொக்கப் பணமும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. உடனே இதைப்பற்றி சுரேஷ் பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் கைரேகை நிருபர்களின் உதவியோடு பதிந்து இருந்த கைரேகைகளை ஆய்வு செய்தனர் மேலும் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் உள்ள பதிவுகளை கண்டறிந்தனர். இதைப்பற்றி வழக்கு பதிவு செய்து அடுத்த நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முஹம்மது சாதிக் அலி.
Comments