திருப்பூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் நடுவே பாதசாரிகளுக்கான பாலம்..!! மக்கள் மகிழ்ச்சி..!!

 

  -MMH

   திருப்பூர் மாவட்டம் குமரன் சந்திப்பு சாலையில் மிகவும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மக்கள் சாலையை கடக்க மிகவும் அவதிப்பட்டு கொண்டிருந்தனர். மேலும் அவ்வப்போது விபத்துகளும் நடந்து கொண்டு இருந்தது. 

இதை அரசு கவனத்தில் கொண்டு தீர்வு கொண்டு வர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். கோரிக்கையின் பலனாக அவ்விடத்தில் பாதசாரிகள் சாலையைக் கடக்க நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டு அது பயன்பாட்டுக்கு வந்தது. 

இந்த நடவடிக்கையினால் மக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து தங்களின்  பெரும் பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டு விட்டதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-பாஷா, திருப்பூர்.

Comments