அரசு பள்ளிக்கு குடிநீர் தொட்டி...!! தாய்மை அறக்கட்டளை பரிசு...!!
கோவை சிங்காநல்லூர் அரசு பள்ளிக்கு மேல்நிலை குடிநீர் தொட்டியை தாய்மை அறக்கட்டளை பரிசளித்துள்ளது.
பள்ளிகள் திறக்கப்பட உள்ள சூழலில் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு நல்ல குடிநீர் வழங்குவது இன்றியமையாதது. சிங்காநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் ஆர்.ஓ மூலம் சுத்திகரிப்பு செய்து வழங்கும் கருவி உள்ளது.
ஆனால் இதற்கு நீர் வழங்க கூடிய நல்ல தொட்டி இல்லை என பள்ளி கல்வி பாதுகாப்பு அமைப்பு மூலம் தாய்மை அறக்கட்டளைக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக 6 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட ஐடியல் டேங்க் வாங்கி வழங்கப்பட்டது.கல்வி கற்க வரும் பிள்ளைகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதன் மூலம் அவர்களது கற்றல் தங்குதடையின்றி செவ்வனே தொடரும் என்பது தாய்மை அறக்கட்டளையின் நம்பிக்கை."உங்கள் நம்பிக்கை வீண் போகாது. தாய்மை அறக்கட்டளை நிர்வாகிகளே... வெல்லட்டும், உங்கள் அறப்பணி..!! வாழ்த்தட்டும் இந்த வையகம்...!!
பத்திரிகையாளன்,
ஊடகவியலாளன்
-ஆர்.கே.பூபதி.
Comments