காளாப்பூரின் சில பகுதிகளில் நாளை மின்தடை!

 

-MMH

    சிங்கம்புணரி - திருப்பத்தூர் தடத்தில் சாலை விரிவாக்கப் பணி நடந்து கொண்டிருப்பதால் மின்மாற்றிகளையும், மின்கம்பங்களையும் மாற்றியக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது நாளை (13.10.21) 'பெரிய பாலம்' முதல் அ.காளாப்பூர் பேருந்து நிறுத்தம்வரை உயர்மின்னழுத்த மின் கம்பங்கள் மற்றும் மின் பாதைகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. 

எனவே, நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்தத் தடத்தில் உள்ள நான்கு மின்மாற்றிகளில் (திருநகர், அம்பேத்கர்நகர், ஜீவாநகர், ஆத்தங்கரைப்பட்டி, அம்மன் கோயில் தெரு மற்றும் அ.காளாப்பூர் மெயின் சாலை) மின் விநியோகம் இருக்காது என சிங்கம்புணரி மின்வாரிய உதவி செயற் பொறியியாளர் தகவல் தெரிவித்துள்ளார். காளாப்பூர் பொதுமக்கள் முன் தயாரிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments