அரசின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த கோவைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நியமனம்!!

 

-MMH

          அரசின் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த மாவட்ட வாரியாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்ட்டது  அதன்படி கோவைக்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களை நியமனம் செய்து  தமிழக அரசு உத்தரவு.

கோவையில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து கோவை மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் வளர்ச்சிப் பணிகள் சென்றடைய மற்றும் கடந்த கொரோனா காலத்தில் களத்தில் பணிபுரிய கோவை மாவட்டத்திற்கு அமைச்சர் இல்லாமல் இருந்து.

இதன் காரணத்தினால் வெவ்வேறு துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் கோவைக்கு வந்து பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வரக்கூடிய சிறப்பு நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக சென்றடைய தமிழகம் முழுவதிலும் மாவட்ட வாரியாக அமைச்சர்களை நேற்று தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்திலிருந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்து கட்சி பணிகளை சிறப்பாக செயல்படுத்திவரும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை வளர்ச்சிப் பணிகளை துரிதப் படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும் இயற்கை சீற்றம் நோய்த்தொற்று இன்ன பிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அமைச்சர்கள் சிலரை சில மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார்.

அதன்படி வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவை மாவட்டத்திற்கு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-ஹனீ்ப் கோவை.

Comments