வால்பாறை தெப்பக்குளம் மேட்டுப் பகுதியில் இடம் தர வேண்டி கள்ளர் இன மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் !!

 

-MMH

   கோவை மாவட்டம் வால்பாறை தாய்முடி எஸ்டேட் அருகே பல ஆண்டுகளாக கள்ளர் இன மக்கள் வசித்து வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டன, இதனால் அந்த பகுதியில் தற்காலிக குடியிருப்பு அமைத்து வசித்து வந்த கள்ளர் மக்கள் மாற்று இடம் வழங்க கோரி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர், 

அதன் ஒரு பகுதியாக நேற்று காந்தி பிறந்தநாளில் இருந்து தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வால்பாறை வட்டாட்சியர் திருமுத்துக்குமார்,நில வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் அமிர்தராஜ் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் ஆனால் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து அவர்கள் உண்ணா விரதம் மேற்கொண்டதால் பொள்ளாச்சி துணை ஆட்சியர் சுப.ஞானதேவ் தலைமையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர், 

அப்போது தெப்பக்குளம் மேட்டுப் பகுதியில் பட்டா வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இல்லையென்றால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அதிகாரிகளிடம் கள்ளர் இன மக்கள் தெரிவித்தனர், பழங்குடியின மக்கள் ஒன்றிணைந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் மலைவாழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வன அலுவலர் மணிகண்டன் தலைமையில் வனத்துறை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


-செந்தில்குமார், வால்பாறை முடீஸ்.

Comments