மழையின் காரணமாக வரத்து குறைந்ததால் தக்காளி விலை கிடுகிடு உயர்வு! பொதுமக்கள் கவலை! !

 

  -MMH

   கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் கிணத்துகடவு தினசரி காய்கறி சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. ஆனாலும் தக்காளியை கொள்முதல் செய்ய பிற மாவட்டங்கள் மற்றும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்திருந்தனர். 

அவர்கள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. கடந்த வாரம் ரூ.35 விற்பனையான ஒரு கிலோ தக்காளி இந்த வாரம் ரூ.43 வரை ஏலம் போனது. ஆப்பிள் தக்காளி ரூ.40-க்கு விற்பனையானது. வரத்து குறைந்ததால் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. 

சில்லரை கடைகளில் நாட்டு தக்காளி ரூ.60 வரைக்கும், ஆப்பிள் தக்காளி ரூ.50 வரையும் விற்பனை செய்யப்பட்டது. 

நாளைய வரலாறு செய்திகளுக்காக, 

கோவை மாவட்ட தலைமை நிருபர்

-S.ராஜேந்திரன்.

Comments