நீ போக வேண்டாம்! நானே போகிறேன்! கடிதம் எழுதி வைத்து விட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பள்ளி மாணவி!!

    -MMH

கோவை வடவள்ளி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி கனகவள்ளி. இவர்களுடைய மகள் பிரியதர்ஷினி (வயது13). இவர் கணுவாயில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கனகவள்ளி, கடந்த 9 வருடங்களுக்கு முன்பு கணவரை பிரிந்து அந்தோணி சாமுவேல் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக பிரியதர்ஷினிக்கும், அவருடைய தாய் கனகவள்ளிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. 

சம்பவத்தன்று தாய்-மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கனகவள்ளி தனது மகளிடம், நான் எங்கேயாவது சென்று விடுகிறேன் என்று கூறிவிட்டு வெளியே சென்றார். தாய் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றதால் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

முன்னதாக அவர் தனது தாய் கனகவள்ளிக்கு ஒரு கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில், நான் போகிறேன்... நான் போகிறேன் என்று அடிக்கடி கூறி வந்தாய். நீ போக வேண்டாம். நானே செல்கிறேன் என்று உருக்கமாக எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை வடவள்ளி போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியதர்ஷினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன்.

Comments