கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனையா.? நேரடியாக தலையிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்.!

 -MMH

கோவையில் மதுபானம் கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்ததாக எழுந்த புகாரின் பேரில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் உத்தரவின்பேரில் கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கோவை லட்சுமிமில் ஏர்டெல் அலுவலகம் எதிர்புறத்தில் தனியார் மால் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த புகாரின் பேரில் இன்று சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கடைக்கு சீல் வைத்துள்ளனர்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: -

கோவை அவினாசி சாலையில் Rolling dough cafe எனும் ஐஸ்கிரீம் கடையில் ஐஸ்கிரீமில் மதுபானம் கலந்து விற்பனை செய்யப்படுவதாக நேற்று மதியம் புகார் பெறப்பட்டது. கோவை மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கீழ்க்கண்ட குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளது.

1- உணவு தயார் செய்யும் இடத்தில் 2 மதுபாட்டில்கள் காணப்பட்டது.

2- காலாவதியான உணவு பொருட்கள் கண்டறியப் பட்டு பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

3- ஆய்வின் போது உணவு கையாளுபவர்கள் உரிய மருத்துவ தகுதிச் சான்று பெறவில்லை.

4- உணவு தயார் செய்யும் இடத்தில் ஈக்கள் அதிகளவில் காணப்பட்டது.

5- உணவு தயாரிக்க பயன்படுத்தப்படும் தண்ணீர் முறையாக ஆய்வு செய்து அறிக்கை பெறவில்லை.

6- உணவு கையாள்பவர்கள் முறையான முகக்கவசம் தலையுறை மற்றும் கையுறை அணிந்து பணி புரிய வில்லை.

7- உணவு தயாரிக்கும் இடம் சுகாதாரமின்றி இருந்தது.

8- உணவு பாதுகாப்பு துறையின் கீழ் பெறப்பட்ட உரிமம் பிரதான இடத்தில் காட்சிப் படுத்தப்படவில்லை.

புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் காரணத்தினால் ஐஸ்கிரீம் கடைக்கு உரிய உரிமம் ரத்து செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டது!!

நாளைய வரலாறு செய்திக்காக,

-ஹனீப், கோவை.

Comments