மலைகிராம மக்களுக்கு பசுமை வீடுகள்!! கட்டும் பணியை ஆய்வு செய்த கலெக்டர்!!

 -MMH

தொண்டாமுத்தூர் சீங்கப்பதி மற்றும் சர்க்கார் போரத்தி மலை கிராமங்களில், கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள் பணிகளை கலெக்டர் சமீரன் ஆய்வு செய்தார்.

தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சீங்கபதி மற்றும் சர்க்கார் போரத்தி ஆகிய மலை கிராமங்களில், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம், முதலமைச்சரின் பசுமை வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. சீங்கபதியில், 1. 26 கோடி ரூபாய் மதிப்பில், 42 வீடுகளும், சர்க்கார் போரத்தியில், ரூ. 26 லட்சம் மதிப்பில், 8 வீடுகளும், சூரிய ஒளி மின்சார வசதியுடன் கட்டப்பட்டு வருகிறது.

இப்பணிகளை, கலெக்டர் சமீரன் நேற்று ஆய்வு செய்தார். கட்டுமான பணிகளை விரைந்து முடித்து, பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் வீடுகளை வழங்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்பின், சீங்கப்பதி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில், ஆய்வு செய்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

நாளைய வரலாறு செய்தி்க்காக,

-ஹனீப்,கோவை.

Comments