விஷப்பூச்சிகள் மத்தியில் குடி இருப்புபகுதி அஞ்சும் மக்கள் கண்டுகொள்ளுமா மின்சார வாரியம்!!

       -MMH

கோவை மாவட்டம் போத்தனூர் அண்ணா புரம் நூறாவது வார்டு பகுதியில் ஐஸ்வர்யா கார்டன் குடியிருப்பு பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் விஷப் பூச்சிகள் அதிகமாக நடமாட்டம் இருப்பதால் அங்கு வசிக்கும் மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். 


அந்தப் பகுதியில் மின்கம்பங்கள் அமைத்து இருக்கும் நிலையில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் அந்த மின் கம்பங்களுக்கு உடனடியாக மின் விளக்கு அமைத்து தர வேண்டும். அங்கு வசிக்கும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

தமிழக தலைமை நிருபர்,

-ஈசா.

Comments