கரும்புக்கடை சாரமேடு பகுதியில் மழை நீருடன் சாக்கடை நீரும் தேங்கி இருப்பதால் நோய் பரவும் அபாயம்..!!

 -MMH

கோவை மாவட்டம் உக்கடம் கரும்புக்கடை பகுதியில் தேங்கியிருக்கும் மழை நீருடன் சாக்கடை கழிவுநீரும் தேங்கி நிற்பதால் நோய்த்தொற்று  அபாயம் அச்சப்படும் மக்கள் கோவை கரும்புக்கடை 75 வார்டுக்கு உட்பட்ட  சாரமேடு, சலாமத் நகர், இரண்டாவது தெரு. இங்கு கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

இங்கு அடிப்படை வசதி கூட இல்லாத காரணத்தினால் இன்று வந்த மழைக்கே அந்தப் பகுதி வெள்ளம்போல் காணப்படுகிறது. மக்கள் வெளியில் நடப்பதற்கு சிரமமாக உள்ள காரணத்தால் நிற்கும் மழை நீரால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளதாலும், இங்கு பல குடும்பங்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் இருக்கும் காரணத்தினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு தேங்கி நிற்கும் மழை நீரை உடனடியாக அகற்றித் தரவேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளை வரலாறு செய்திக்காக,

-ஜாஃபர், அனஸ்.

Comments