தொடர் மழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு பக்தர்கள் குளிக்க தடை! கோவில் நிர்வாகம் அறிவிப்பு!!

 

  -MMH

   பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன்புதூரில் இருந்து உப்பாறு தொடங்குகிறது. இந்த ஆற்றுக்கு வகரையாற்றில் இருந்து நீர்வரத்து உள்ளது. மேலும் உப்பாறு ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு பின்புறம் வழியாக சென்று ஆனைமலை ஆழியாற்றில் கலக்கிறது.

இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக வகரையாறு, உப்பாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் உப்பாற்றில் குளிப்பது, கை, கால்களை கழுவுவது வழக்கம்.

தற்போது மழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆற்றில் வெள்ளம் குறையவில்லை. இதன் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் ஆற்றில் குளிக்க தடை விதித்து அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது. அதில் தண்ணீர் அதிகளவு வருவதால் பக்தர்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று கூறப்பட்டு உள்ளது.

பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மார்க்கெட் ரோடு ரெயில்வே பாலம் உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. மேலும் சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழுந்தன. இதன் காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, சீரமைப்பு பணிகள் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

கோவை மாவட்ட தலைமை நிருபர்,

-S.ராஜேந்திரன் .

Comments