துரை வைகோவுக்கு உயர்ந்த பொறுப்பு...!! மாணவரணி தீர்மானம்...!!

 

  -MMH

   ம.தி.மு.க கட்சியில் துரை வை.கோ.வுக்கு உரிய உயர்ந்த பொறுப்பு வழங்க வேண்டும் என ம.தி.மு.க மாணவர் அணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.க மாணவர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று 18.10.2021 திங்கள்கிழமை மாநில மாணவர் அணிச் செயலாளர் பால.சசிகுமார்  தலைமையில் நடைபெற்றது. 

துரை வைகோ

மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்கள் இக்கூட்டத்திற்கு முன்னிலை வகித்தனர். மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மறுமலர்ச்சி மாணவர் மன்ற நிர்வாகிகள் ஆகியோர் கூட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர்.


ம.தி.மு.க மாணவரணி மாநில செயலாளர் பால.சசிகுமார்.

இக்கூட்டத்தில் ஏகமனதாக துரை வைகோ அவர்களுக்கு உயரிய, உயர்ந்த பொறுப்பினை கட்சியில் வழங்கி, கட்சியின் வளர்ச்சிக்கு துரை வைகோ  பணியாற்றும் வாய்ப்பை தலைமை கழகம் வழங்கிட வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- பத்திரிகையாளன்,

ஊடகவியலாளன்

-ஆர்.கே.பூபதி.

Comments