சிங்கம்புணரி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் தவறி விழுந்து பலி!

 

  -MMH

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிப்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைக்கண்ணு. வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தயாநிதி (வயது52).

தயாநிதி, தனது மகன் வினோத்குமாருடன் நேற்று மாலை, இருசக்கர வாகனத்தில் பொன்னமராவதி சென்றிருக்கிறார். வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்த தயாநிதி செல்லியம்பட்டி அருகே நிலைதடுமாறி, சாலையில் விழுந்திருக்கிறார். இதில் அவரது தலையின் பின்புறம் காயம் ஏற்பட்டதால் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின்பு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எஸ்.வி.மங்கலம் காவல் ஆய்வாளர் விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

- ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments