நிலைதடுமாறிய அரசு பேருந்து! சாலை ஓர பள்ளத்தில் இறங்கியதால் பரபரப்பு! - விபத்து ஏற்படும் முன் சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தல்!!

 -MMH

பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், அரசு டவுன் பஸ் நிலை தடுமாறி, ரோட்டில் இருந்து சரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சியில் இருந்து, நேற்று மதியம், 2:00 மணிக்கு (வழித்தட எண், 5) அரசு டவுன் பஸ் கோபாலபுரம் புறப்பட்டது. பஸ்சில், 30க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.நரசிங்காபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென பஸ் நிலை தடுமாறி, ரோட்டில் இருந்து கீழே மண்ணில் இறங்கியது.ரோடு, ஒரு அடி உயரத்துக்கும் மேல் திட்டு போன்று இருந்ததால், திரும்பவும் டிரைவரால் பஸ்சை ரோட்டுக்கு கொண்டு வர முடியவில்லை. 

இதையடுத்து, அருகில் இருந்த பொக்லைன் இயந்திரம் மற்றும் பொதுமக்களின் துணை கொண்டு, பஸ் ரோட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பயணத்தை தொடர்ந்தது.அப்பகுதியில் ரோடு புதிதாக அமைக்கப்படும் நிலையில், மழை ஈரமும், ரோட்டில் சிதறிக்கிடந்த ரோடு அமைக்கும் கற்களும் சேர்ந்து, பஸ்சை நிலை தடுமாற வைத்ததாக, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.விதிகளுக்கு முரணாக, ரோட்டின் இரு பக்கமும் ஓரத்தில் புதிதாக அமைக்கப்படுவதால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு கருதி, நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், இதில் கவனம் செலுத்த வேண்டும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், கோவை மாவட்டம்.

Comments