பஸ்ஸில் கூட்டம்!! ஆட்டையை போட்டு விட்டு ஓட்டம்!! உஷார் மக்களே உஷார்!!

     -MMH

சிங்காநல்லூர் பகுதியில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஓடும் பேருந்தில் பெண்ணிடம் நகை திருட்டு. காவல்துறை விசாரணை. கோவை சிங்காநல்லூர் ஜெயா நகரை சேர்ந்தவர் சுலோசனா (வயது 53). ஒரு தனியார் மருத்துவமனையில் ஊழியராக பணியாற்றி வருகிறார் சம்பவத்தன்று சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் பஸ் ஏறி வேலைக்கு சென்றார் பின்னர் ஹோப் காலேஜ் பஸ் ஸ்டாப்பில் இறங்கினார். இறங்கும்போது தன் கழுத்தில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 

கூட்ட நெரிசலை பயன்படுத்தி தங்கச்சங்கிலியை மர்ம நபர் திருடிச் சென்றதாக தெரியவந்ததையடுத்து சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் சுலோச்சனா புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் மர்ம நபரை தேடி வருகின்றனர். அதிகமான கூட்டநெரிசலில் இருக்கும் இடத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும். கொஞ்சம் கவனம் தப்பினாலும் இதுபோல் இழப்புக்களை சந்திக்க நேரிடும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றன.

-முகமது சாதிக் அலி.

Comments