இஸ்லாமியர்களின் புனித நாளான மீலாது அன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!! கோவை மாவட்ட ஆட்சியர் தகவல்..!!

 

  -MMH

   இஸ்லாமியர்களின் புனித நாளான மீலாது தினத்தன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என கலெக்டர் ஜிஎஸ் சமீரன் தகவல்..

வருகின்ற அக்டோபர் 19 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று  இஸ்லாமியர்களின் புனிதர்   முஹம்மது நபி (ஸல் ) அவர்களின் பிறந்தநாள் மிலாதுநபி விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு மாவட்ட வாணிபகழக மதுபான கடைகள், பொதுமக்கள்  மனமகிழ் மன்றம் போன்றவற்றில் இயங்கும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஓட்டலில் இயங்கும் மதுக்கூடங்கள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் விக்கும் மதுக்கடைகள் போன்றவைகள் அனைத்தும் அடைக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர் ஜிஎஸ் சமீரன் தகவல் தெரிவித்தார். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments