சிங்கம்புணரி அருகே தென்னைமரம் சாய்ந்து வீட்டின் மேற்கூரை சேதம்! தீயணைப்புதுறையினர் மீட்புப்பணி!

-MMH

                 சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள தேனம்மாள்பட்டியில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி. நேற்று மாலை தேனம்மாள்பட்டியில் லேசான காற்றுடன் கூடிய மழைபெய்தது. அப்போது அவரது வீட்டருகே இருந்த 50 ஆண்டு வயதான, 40 அடி உயரம் கொண்ட தென்னைமரம் ஒன்று திடீரென ஓட்டுவீட்டின் மேல் சாய்ந்து மேல்பகுதி சேதமடைந்தது. 30 க்கும் மேற்பட்ட ஓடுகள் உடைந்தன. 

மரம் விழுந்த நேரத்தில், ஓட்டு வீட்டில் யாரும் இல்லாமல் வீட்டின் முன்பகுதியில் உள்ள சமையல் செய்யும் கூரை கூடத்தில் இருந்ததால் காயம் இன்றி உயிர்தப்பினர். உடனடியாக சிங்கம்புணரி தீயணைப்புதுறைக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலர் சீ.பிரகாஷ் தலைமையிலான தீயணைப்புதுறை வீரர்கள், வீட்டின் மேல்பகுதியில் மேற்கொண்டு சேதம் எதுவும் ஏற்படாமல் தென்னை மரத்தை அகற்றினர்.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments