திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தேர்தலில் பதிவான வாக்குகளும் பதட்டமான சூழ்நிலையில் இரு கட்சியினரும் !!

 

-MMH

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆனைமலை  ஒன்றியம் திவான்சாபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் முனியன் மரணமடைந்ததால் அந்தப் பதவிக்கு புதியவரை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் நேற்று நடைபெற்றது.

திவான்சாபுதூர் ஊராட்சியில் மொத்த வாக்காளர்கள் 8572 பேர், அதில் ஆண்கள் 3174 பேரும்,பெண்கள்  3380 பேரும்,மூன்றாம் பாலினம் ஒருவர்  உள்ள நிலையில் ஆண்கள் 3174, பெண்கள் 3380, மூன்றாம் பாலினம் ஒருவர் என மொத்தம்  6555 பேர் வாக்களித்துள்ளனர். வாக்கு சதவீதம் 76.47 சதவீதம்.

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என அதிமுகவும், தலைவர் பதவியை கைப்பற்ற வேண்டு மென திமுகவும் கடந்த கடந்த நாட்களில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

பிரச்சாரம் முடிந்து, தேர்தல் முடிந்து, வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள்  நடைபெற உள்ள நிலையில் யார் ஜெயித்தாலும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் ஜெயிப்பார்கள் என நம்பகத்தன்மை வட்டாரங்கள் தெரிவிப்பதால் இரு கட்சியினர் இடையே  பதட்டமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

M.சுரேஷ்குமார்.

Comments