சிங்கம்புணரி அருகே இறுதிசடங்கில் தகராறு! விசாரிக்கச் சென்ற காவல்துறையினரை மிரட்டிய தந்தை - மகன் கைது!

 

-MMH

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி வட்டம், எஸ்.புதூர் ஒன்றியம் அம்மாபட்டியில் 85 வயதான ஒரு மூதாட்டி மரணமடைந்துள்ளார்.  அவருக்கு இறுதிசடங்கு செய்வதில் சுடுகாட்டில் வைத்து குடிபோதையால் உறவினர்களிடையே தகராறு நடைபெறுவதாக புழுதிபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் வந்தது.

இதையடுத்து, காவலர் வினோத் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றார். அப்போது அங்கிருந்த வலசைப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணியன் (வயது53) மற்றும் அவரது மகன் சந்திரசேகரன் (23), பெருமாள் மகன் செல்வம் என்ற செல்வராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து காவலர் வினோத்தை தகாத வார்த்தையால் பேசி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.

இதையடுத்து புழுதிபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து, சிங்கம்புணரி நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான செல்வம் என்ற செல்வராஜை தேடி வருகின்றனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments