கேலி பேசும் மனிதர்களே! நீங்கள் மனம் மாறும் காலம் எப்போது? குமுறும் திருநங்கைகள்..!!!

  -MMH

  கவுண்டம்பாளையம் பகுதியில் திருநங்கைகளுடன் தகராறு செய்து அதனை தட்டிக் கேட்ட நண்பரிடம் பணத்தை பறித்து சென்ற 6 பேர் கைது.

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியில் நேற்று இரவு திருநங்கைகள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த பேர் திருநங்கைகளை முற்றுகையிட்டு தகராறு செய்துள்ளனர். 

இதை அந்த பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நபர்கள் மகாலிங்கத்தை தாக்கி அவனிடமிருந்து பணத்தை பறித்து சென்றுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த துடியலூர் காவல் நிலைய போலீசார் அந்த இடத்துக்கு விரைந்து வந்து ராஜபாளையத்தை சேர்ந்த மகேஷ் குமார் (வயது 29), மகேஷ் (வயது 32) தொப்பம்பட்டி யைச் சேர்ந்த பழனி, பரமசிவம்  (வயது 30 ), கார்த்தி, பிரவீன்  சரவணம்பட்டி   காபி கடையை சேர்ந்த நரேந்திரன் ஆகிய 6 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

திருநங்கைகள் ஆன நாங்களும் உங்களைப் போல் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்புதான். எங்களை கேலி கிண்டல் செய்து எங்களைக் கேவலமாக நடத்தும் இந்த சூழல் எப்ப தான் மாறுமோ என்ற  திருநங்கைகளின் குமுறல் நம் இதயத்தில் இனியாவது இறக்கத்தை சுரக்கவைக்கும்மா?

 நாளைய வரலாறு செய்திக்காக,

-முஹம்மது சாதிக் அலி.

Comments