புரோசோன் மாலில் நடக்கும் 'தில் சே தீபாவளி' விழாவில் ஷாப்பிங் செய்வோருக்கு தங்க நாணயம், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் அறிவிப்பு!!

     -MMH

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தற்போது விரும்பிய அனைத்து  பொருட்களையும் வாங்க வணிக வளாகங்களில் மக்கள் வருவது அதிகரித்து  வருகின்றது. இந்நிலையில், ஷாப்பிங் செய்ய வரும் பொதுமக்களை கவரும் விதமாக கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள புரோசோன் மாலில் தில் சே தீபாவளி ஷாப்பிங் எனும் புதிய பரிசு திருவிழா துவங்கியது. 

தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடைபெறும் இதில்,23 ந்தேதி துவங்கி நவம்பர் 7 ந்தேதி வரை ரூ.1,999க்கு ஷாப்பிங் செய்வோருக்கு, பரிசு வழங்கப்படும் வகையில் புதிய பரிசு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து புரோசோன் மாலின் தலைமை அதிகாரி அம்ரிக் பனேசர் கூறுகையில், இந்த வருடம் 'தில் சே தீபாவளி' திருவிழாவில் சுமார் பதினைந்து இலட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதில், மோட்டார் பைக்,எலக்ரிக் பைக், தங்க நாணயம், ரெப்ரிஜிரேட்டர்கள், வாட்ச்சுகள் என ஏராளமான பரிசுகளை வழங்க உள்ளதாக அவர் தெரிவித்தார். முன்னதாக 'தில் சே தீபாவளி' துவக்க விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் வணிக வளாகத்தில் நடைபெற்றது.

- சீனி,போத்தனூர்.

Comments