சேரன்மாநகர், சிங்கப் பெண்..!! அடித்து தூள் கிளப்பிய தாய்குலம்..!!!

 -MMH

கோவை சேரன் மாநகர் பகுதியில் நகை பரித்த ஆசாமியை மடக்கிப் பிடித்த பெண்.

 கோவை சேரன் மாநகர் பகுதியில் வசிக்கின்ற பெண்மணி சித்திரைச் செல்வி வயது 43 இவர் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை புரிந்து வருகிறார் இந்நிலையில் நேற்று மதியம் வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்தார்  அப்போது சித்திரை செல்வி அருகே வந்த மர்ம நபர் ஒருவர் அவர் கழுத்தில் அணிந்திருந்த 10 சவரன் நகையை பறித்துள்ளார். அதிர்ச்சியடைந்த சித்திரைச் செல்வி கூச்சலிட்டு உள்ளார்.

மேலும் அந்தப் பதட்டத்திலும் வீரமாக மர்ம நபர் ஓட்டிவந்த  பைக்கை  தட்டி விட்டார். அந்த மர்ம  நபர் நிலைதடுமாறி பைக்கிலிருந்து  கீழே விழுந்துள்ளார். உடனே அருகாமையில் இருந்தவர்கள் நகை பறித்த நபரை சுற்றிவளைத்து தர்ம அடி கொடுத்து பீளமேடு காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர்  . போலீசார்  விசாரணையில் அந்த வாலிபர் பீளமேடு மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம் அவரது மகன் சூர்யா வயது 25 என்பது தெரியவந்தது.

சித்திரை செல்வியின் இந்த வீரமான செயலுக்கு  புகழாரம் சூட்டி வருகின்றனர். இக்கட்டான  சூழ்நிலையிலும் சமயோஜித புத்தியுடன் செயல்பட்ட இந்த பெண் மற்ற பெண்களுக்கு உதாரணமாக திகழ்வது மகிழ்ச்சி அளிப்பதாக  பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-முகமது சாதிக் அலி.

Comments