வால்பாறை பகுதியில் பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்து விழிப்புணர்வு! தீயணைப்பு துறை சார்பில் அதிகாரிகள் ஏற்பாடு!!

 -MMH

வால்பாறையில் உள்ள தமிழ்நாடு அரசு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் வால்பாறை பகுதி பொது மக்கள் பாதுகாப்பாக பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகையை கொண்டாட துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு துணை நிலைய அதிகாரி பிரகாஷ் குமார் முன்னிலை வகித்தார்.

தீயணைப்பு வீரர்கள் வேலுமணி, பாலமுரளி ஆகியோர் அடங்கிய குழுவினர் வால்பாறை நகரில் பல்வேறு இடங்களில் தீயணைப்பு வாகனங்கள் மூலம் ஒலிபெருக்கியில் பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் வால்பாறை நகரில் பொது மக்கள் அதிகம் கூடும் காந்தி சிலை பஸ் நிறுத்தம், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம், ஸ்டேன்மோர் சந்திப்பு ஆகிய இடங்களில் பாதுகாப்பாக தீபாவளியை கொண்டாடுவது குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-S.ராஜேந்திரன், செந்தில்குமார்.

Comments